என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  வடசேரியில் லிப்ட் கேட்டு டிரைவரிடம் நகை பறிப்பு
  X

  கோப்பு படம் 

  வடசேரியில் லிப்ட் கேட்டு டிரைவரிடம் நகை பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சி.சி.டி.வி. காமிராவில் சிக்கிய கொள்ளையன் உருவம்
  • போலீசார் விசாரணை

  நாகர்கோவில்:

  நாகர்கோவில் பள்ளி விளை ரெயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 59 )டிரைவர். இவர் நேற்று வடசேரி கிருஷ்ணன் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு டிப் டாப் உடையில் வந்த வாலிபர் குமரேசனிடம் மோட்டார் சைக்கிளில் லிப்ட் கேட்டுள்ளார்.

  இதையடுத்து குமரேசன் அவரை வடசேரி பஸ் நிலையத்தில் விடுவதற்காக அழைத்து வந்தார். வெள்ளா ளர் தெரு பகுதியில் வந்த போது அந்த வாலிபர் தன்னை இங்கேயே இறக்கி விடுமாறு கூறினார். உடனே குமரேசன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது திடீரென குமரேசன் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துவிட்டு அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.

  இதையடுத்து குமரேசன் திருடன்... திருடன்....என கூச்சலிட்டார். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து மறைந்து விட்டார். இது குறித்து குமரேசன் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் குமரேசன் மோட்டார் சைக்கிள் செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×