search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு
    X

    கோப்பு படம் : பேச்சிபாறை அணை

    குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிப்பு

    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    • காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் மழை பெய்யும்

    நாகர்கோவில்:

    தெற்கு வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    ஆனால் கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இரவும் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது.

    நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதன் பிறகு வானம் மப்பும் மந்தாரமு மாகவே காணப்பட்டது. கீரிப்பாறை, தடிக்காரன் கோணம், மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், அஞ்சு கிராமம், சுசீந்திரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளி லும் லேசான சாரல் மழை பெய்தது.

    பேச்சிபாறை, பெருஞ் சாணி அணைப் பகுதிகளி லும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.பெருஞ்சாணியில் அதிக பட்சமாக 3.8மி.மி மழை பெய்து உள்ளது. திற்பரப்பு அருவியில் சாரல் மழை பெய்து வரு வதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    பேச்சிபாறை, பெருஞ் சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதி காரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.70அடியாக இருந்தது.அணைக்கு 721 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 788 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.பெருஞ்சானி அணை நீர்மட்டம் 73.70அடியாக உள்ளது.அணைக்கு 126 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 225 கன அடி தண்ணீர் வெளியேற்ற ப்படுகிறது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 21 அடியை எட்டி உள்ளது. நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து பொது மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×