search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருமனை கிறிஸ்துமஸ் விழா ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் ஸ்டீபன் பேசிய காட்சி.

    அருமனை கிறிஸ்துமஸ் விழா ஆலோசனை கூட்டம்

    • தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு
    • இந்த ஆண்டு வெள்ளிவிழா 3 நாட்கள் நடத்த தீர்மானிக்கப் பட்டது.

    நாகர்கோவில்:

    அருமனை கிறிஸ்தவ இயக்கம் நடத்தும் 25-வது கிறிஸ்துமஸ் விழாவின் ஆலோசனை கூட்டம் இயக்க செயலாளர் ஸ்டீபன் தலைமையில் நடந்தது. டென்னிஸ், களியல் சிங், ஜோஸ் செல்வன், கென்னத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஸ்டர் தேவ சுஜின் ஆரம்ப ஜெபம் செய் தார். ஷாஜி வரவேற்று பேசினார்.

    சிறப்பு அழைப்பாளர்க ளாக மேல்புறம் ஒன்றிய தி.மு.க. அவைத்தலைவர் தேவதாஸ், சங்கரன் (காங்கிரஸ்), விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செய லாளர் மாத்தூர் ஜெயன், கிழக்கு மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இயக்கத்தின் அமைப்பா ளர் காலித், இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜாண் கிறிஸ்டோபர், காதர் மைதீன் ஆகியோர் 25-வது கிறிஸ்துமஸ் விழா சம்பந்த மான ஆலோசனைகளை வழங்கினார்.

    கூட்டத்தில், அருமனை கிறிஸ்துமஸ் விழா இந்த ஆண்டு வெள்ளிவிழா 3 நாட்கள் நடத்த தீர்மானிக்கப் பட்டது. அதில் 2 நாட்கள் பேரின்ப பெருவிழாவும், மூன்றாவது நாள் சமூக நல்லிணக்க மாநாடும் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    அருமனை கிறிஸ்துமஸ் விழாவிற்கு வரும் அனைத்து தலைவர்களுக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

    எஸ்.டி.பி.ஐ. ஷேக் முகம்மது, தொல்காப்பியன், ஜாகீர் உசேன், சாந்தகுமார், சக்கர, ரவி, ஜெஸ்டின், எல்வின்ஸ், செலின், பிரதாப், சுந்தர் மற்றும் 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வக்கீல் திலீப் சிங் நன்றியுரை கூறினார். பெஞ்சமின் இறுதி ஜெபம் செய்தார்.

    Next Story
    ×