search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    42 ஆண்டுகள் பணியாற்றி வந்த பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி ஓய்வு
    X

    கோப்பு படம் 

    42 ஆண்டுகள் பணியாற்றி வந்த பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி ஓய்வு

    • புதிய மேல்சாந்தி பதவிக்கு கடும் போட்டி
    • ன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    இந்த கோவில் 3ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்க ணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இந்த கோவில் நடை பக்தர்களின் தரிசனத்திற்காக தினமும் 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும்.அதேபோல மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த கோவிலில் தற்போது மேல்சாந்திகளாக மணிகண்டன் போற்றி, விட்டல் போற்றி, பத்மநாபன் போற்றி, சீனிவாசன் போற்றி ஆகிய 4 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

    இதுதவிர கீழ் சாந்திகளாக ராமகிருஷ்ணன் போற்றி, ராம்பிரகாஷ் போற்றி, ஸ்ரீராம் போற்றி ஆகிய 3 பேர் பணியாற்றிவருகிறார்கள். இதில் இந்த கோவிலில் மேல்சாந்தியாக 42 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வந்த மணி கண்டன் போற்றி நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு பிரிவுபசார விழா நடந்தது.

    இதில் புதிதாக உரு வாக்கப்பட்ட கன்னியாகுமரி பகவதிஅம்மன் நற்பணி சங்க நிர்வாகிகள் பால்சாமி, வைகுண்ட பெருமாள், அரிகிருஷ்ணபெருமாள் மற்றும் பலர் ஓய்வுபெற்ற மேல்சாந்தி மணிகண்டன் போற்றிக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

    மேல்சாந்தி மணிகண்டன் போற்றி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காலியாக உள்ள மேல்சாந்தி பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த பதவியை பெறுவதற்காக 2 பேர் களத்தில் இறங்கி உள்ளனர்.

    Next Story
    ×