search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொட்டாரம் பகுதியில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்
    X

    கொட்டாரம் பகுதியில் தண்ணீர் இல்லாமல் வெடிப்பு விழுந்து காணப்படும் வயல்வெளியை படத்தில் காணலாம் 

    கொட்டாரம் பகுதியில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்

    • பேச்சிப்பாறை அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் தோவாளை கால்வாயின் கடைவரம்பு பகுதியான கொட்டாரம் ஜேக்கப்பிளாக் புரவு பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
    • உடனடியாக தண்ணீர் திறந்து விடாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட விவசாய பாசனத்துக்காக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணை தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணை தண்ணீரை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாம் போக சாகுபடியான கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த அணைகளில் இருந்து நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய், தோவாளை கால்வாய், புத்தனாறு கால்வாய், அனந்தன் கால்வாய் உள்பட பல கால்வாய்களில் விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

    இதில் தோவாளை கால்வாயின் கடை வரம்பு பகுதி யான கொட்டாரம் ஜேக்கப் பிளாக் புரவு பகுதி யில் உள்ள கொட்டாரம், பொட்டல்குளம், பெரிய விளை, சுந்தரபுரம் போன்ற பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் கும்பப்பூ சாகுபடிக்கான நெல்பயிரிடப்பட்டு உள்ளது. தோவாளை கால்வாயின் கடைவரம்பு பகுதியில் உள்ள நிலப்பாறையில் இருந்து கூண்டு பாலம் வழியாக செல்லும் கிளை கால்வாய் மூலம் இந்த ஜேக்கப் பிளாக் கடை வரம்புபகுதியில் உள்ள வயல்களுக்கு தினமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பேச்சிப்பாறை அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்த பிறகும் இந்த கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு ராதாபுரம் கால்வாயில் திறந்து விடப்பட்டுஉள்ளது. ஜேக்கப் பிளாக் புரவு பகுதியில் நெற் பயிர்கள் பயிரிடப்பட்டு 40 நாட்கள்ஆகிவிட்டன. இதனால் இந்த நெற் பயிர்கள் கருநடவு பருவத்தை கடந்துவிட்ட நிலையில் உள்ளது. சில இடங்களில் இந்த நெற் பயிர் தற்போது பொதியும் கதிருமான பருவத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஜேக்கப் பிளாக் புரவின் கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படாததால் வயல்வெளிகள் தண்ணீரின்றி வெடிப்பு விழுந்து வறண்டு காணப் படுகிறது.

    அதுமட்டுமின்றி தண்ணீர் இல்லாமல் பொதியும் கதிருமான பருவத்தை எட்டிஇருக்கும் சூழ்நிலையில் நெற் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுஉள்ளது.இதனால் விவசாயிகள்கவலை அடைந்துள்ளனர். விவசாயி கள் தினம் தினம் தங்களது வயலுக்கு சென்று தண்ணீர் வராதா! தண்ணீர் வராதா! வாடிய பயிரை காப்பாற்ற முடியாதா? என்று எதிர் பார்த்தபடி காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    பேச்சிப்பாறை அணை யில் போதிய அளவு தண்ணீர் இருந்த பிறகும் தோவாளை கால்வாயின் கடைவரம்பு பகுதியான கொட்டாரம் ஜேக்கப்பிளாக் புரவு பகுதிக்கு தண்ணீர் திறந்து விடாமல் ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுவது ஏன்? அதுவும் சுழற்சி முறையில் வாரத்துக்கு ஒருமுறை இந்த பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடுவதன் மர்மம் என்ன? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதன் பிறகும் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ள நெல் பயிரை காப்பாற்றஉடனடி யாக தண்ணீர் திறந்து விடா விட்டால் போராட்ட களத்தில் குதிப்பதற்கும் விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

    Next Story
    ×