search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் நகராட்சியில் இருந்து 12.68 டன் பிளாஸ்டிக் கழிவுகள் குஜராத் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு
    X

    குளச்சல் நகராட்சியிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் குஜராத் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைத்த காட்சி.

    குளச்சல் நகராட்சியில் இருந்து 12.68 டன் பிளாஸ்டிக் கழிவுகள் குஜராத் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு

    • பிளாஸ்டிக் தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும்
    • சுற்றுச்சூழல் மற்றும் நிலம் மாசுபடுவதை தவிர்க்க வேண்டும்

    கன்னியாகுமரி:

    குளச்சல் நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு குப்பைகளை மட்கும் மற்றும் மட்காத குப்பைகள் என பிரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உருவாகும் குப்பைகளை தரம் பிரித்து இரு வேறு குப்பை தொட்டிகளில் தூய்மை பணியாளர்களிடம் வழங்கவும் அறிவுறுத் தப்பட்டு வருகிறது.

    பொதுமக்களால் பிரித்து அளிக்கப்படும் காய்கறி கழிவு, பழக்கழிவு, உணவு கழிவு, பூக்கழிவு, முட்டை ஓடு போன்ற மட்கும் குப்பைகளை நகராட்சி நுண்ணுயிர் உர கூடத்திற்கு எடுத்து சென்று இயற்கை முறையில் உரமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இது தவிர ஒரு முறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மட்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மறு சுழற்சி செய்து நீர், காற்று மாசுபடுவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக குளச்சல் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை கூடத்தில் சேகரித்து வைக்கப்பட்ட 12.68 டன் பிளாஸ்டிக் கழிவுகள் குஜராத் மாநிலம் சூரத் நகர் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நகர்மன்ற தலைவர் நசீர், ஆணையர் விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். சுகா தார அலுவலர் பிச்சையா பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை பி.எஸ். மானேஜ்மெண்ட் நிறுவனம் மூலம் குஜராத் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழல் மற்றும் நிலம் மாசுபடுவதை தவிர்க்க நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பிளாஸ்டிக் தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×