search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காமராஜர் விருதுக்கு கன்னிவாடி, ஆயக்குடி அரசு பள்ளிகள் தேர்வு
    X

    கோப்பு படம்.

    காமராஜர் விருதுக்கு கன்னிவாடி, ஆயக்குடி அரசு பள்ளிகள் தேர்வு

    • தேர்வு செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75 ஆயிரம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
    • பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

    பழனி:

    ஆண்டுேதாறும் ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாக கடைபிடிக்கப் படுகிறது. இதையொட்டி மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு காமராஜர் விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டு பழனி அருகே உள்ள ஆயக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியும், திண்டுக்கல் அருகே உள்ள கன்னிவாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் விருதுக்கு தேர்வாகி உள்ளன. தேர்வு செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.75 ஆயிரம், மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது,

    கல்வி செயல்பாடுகள், மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுச்சூழல் பராமரிப்பு, மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருதல், கற்பித்தல் திறன், உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் காமராஜர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×