என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
ஆக்கிரமிப்பாளர்களால் குப்பை கொட்டும் இடமாக மாறிய கண்மாய்களை பாதுகாக்க வேண்டும் -விவசாயிகள் வலியுறுத்தல்
- பெரியகுளம், சிறு குளம் உள்ளிட்ட கண்மாய்களில் பெரும்பாலான பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர்.
- போர்க்கால அடிப் படையில் அனைத்து கண்மாய்களிலும் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 543 ஏக்கர் பரப்பளவில் பஞ்சம்தாங்கி, சாந்த நேரி, பெரியகுளம் உள்ளிட்ட 10 கண்மாய்கள் அமைந்து ள்ளன. இதில் ஓட்டணை, பெரியகுளம், பஞ்சம்தாங்கி உள்ளிட்ட கண்மாய்களுக்கு மூல வைகை ஆற்றில் இருந்து வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. பிற கண்மாய்களுக்கு மேகமலை அருவி, ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது.
இந்த நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்மாய்களில் 64 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பஞ்சம்தாங்கி, 81 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சாந்தநேரி, 109 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரியகுளம், சிறு குளம் உள்ளிட்ட கண்மாய்களில் பெரும்பாலான பகுதியை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர். கண்மாய்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் வருசநாடு பகுதி விவசாயிகள் ஒருங்கி ணைந்து குழு அமைத்து அதன் மூலம் கண்மாய்களில் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் வாயிலாக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தனர். அதன் விளைவாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பெரியகுளம், சாந்த நேரி, பஞ்சம்தாங்கி ஆகிய கண்மாய்கள் ஆக்கிரமி ப்புகளை அகற்ற அதிகாரி கள் நடவடிக்கை மேற்கொ ண்டனர்.
முதற்கட்டமாக கண்மாய் அளவீடு செய்யப்பட்டு கரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பெரியகுளம், பஞ்சம்தாங்கி கண்மாய்களில் தனிநபர்கள் ஆக்கிரமித்து வைக்க ப்பட்டிருந்த தென்னை மற்றும் இலவம் மரங்கள் அகற்றப்பட்டன. அதன் பின்பு கண்மாய் சீரமைப்பு பணிகள் திடீரென நிறுத்தப் பட்டது. பணிகள் நிறுத்த ப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது வரை மீண்டும் பணிகள் தொடங்கப்ப டவில்லை.
இதனால் பஞ்சம்தாங்கி மற்றும் பெரியகுளம் கண்மாய்கள் பொதுமக்கள் குப்பைகள் குவிக்கும் இடமாக மாறி வருகிறது. மேலும் அதிகாரிகள் நட வடிக்கை எடுக்காததால் தனி நபர்கள் மீண்டும் கண்மாயை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போ ர்க்கால அடிப் படையில் அனைத்து கண்மாய்களிலும் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






