search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் மாநகராட்சி 50, 51, 52-வது வார்டுகளில் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை  செயல்படுத்த ரூ.34 கோடி ஒதுக்கீடு
    X

    நாகர்கோவில் மாநகராட்சி 50, 51, 52-வது வார்டுகளில் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.34 கோடி ஒதுக்கீடு

    • 6 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்படுகிறது
    • கிருஷ்ணன்கோவிலுக்கு பைப்லைன் அமைக்கப்பட்டு தண்ணீர் வெள்ளோட்டம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட மக்களுக்கு முக்கடல் அணையில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. போதுமான அளவு தண்ணீர் இல்லாத தையடுத்து புதிய திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.

    ரூ.299 கோடி செலவில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் தற்பொழுது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. புத்தன் அணையில் இருந்து பைப் லைன் மூலமாக நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.

    தற்போது புத்தன் அணையில் இருந்து கிருஷ்ணன்கோவிலுக்கு பைப்லைன் அமைக்கப் பட்டு தண்ணீர் வெள்ளோட்டம் பணி நடந்தது. ஒரு சில இடங் கல் பைப்லைனில் நீர்க்க சிவு இருந்ததையடுத்து அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணிகளை துரிதப்படுத்தும் வகையில் மேயர் மகேஷ், கிருஷ்ணன் கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதை தொடர்ந்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்க ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை 3 மாத காலத்திற்குள் முடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியுடன் தெங்கம்புதூர், ஆளூர் பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளுக்கும் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை வழங்க மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் கட்டமாக தெங்கம்புதூர் பகுதியில் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் மாநகராட்சிக் குட்பட்ட 50, 51, 52-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் புத்தன் அணை குடிநீர் திட்டத்தை செயல்படுத்த ரூ.34கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணன் கோவிலில் இருந்து தெங்கம்புதூருக்கு பைப் லைன் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக 6 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    3 வார்டுக்குட்பட்ட 4000 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். புத்தன் அணை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் போது பொதுமக்களுக்கு தங்குதடையின்றி தினமும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் ஒரு நபருக்கு 135லிட்டர் தண்ணீர் வழங்க நடவ டிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    Next Story
    ×