என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளியில் ஆசிரியர்கள் பூக்கோலமிட்டு மாணவிகளை கேரள பெண்கள் போல் அலங்கரித்து உற்சாகத்தோடு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
- ஆசிரியர்கள் பூக்கோலமிட்டு மாணவிகளை கேரள பெண்கள் போல் அலங்கரித்து உற்சாகத்தோடு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
- பள்ளியின் தாளாளர்கள் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் ஓணம் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆசிரியர்கள் பூக்கோலமிட்டு மாணவிகளை கேரள பெண்கள் போல் அலங்கரித்து உற்சாகத்தோடு ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.
இப்பண்டிகையை ஸ்ரீராம் பள்ளியின் தாளாளர்கள் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். பள்ளியின் நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி கலந்து கொண்டனர்.
பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான்இருதயராஜ் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவ்விழாவை ஒருங்கிணைப்பாளர்கள் புவனேஸ்வரி, மணிமேகலை மற்றும் பிரவீணா ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.






