என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில்   விளையாட்டு விழா
    X

    விழா நடந்த போது எடுத்தபடம்.

    கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் விளையாட்டு விழா

    • குழந்தைகளுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது.
    • கையிறு இழுத்தல் போட்டி, தேடிப்பார் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் தலைமை தாங்கினர். பள்ளியின் நிர்வாக இயக்குநர்கள் தமிழ்மணி மற்றும் பவானி, தமிழ்மணி, சன்மதி ராஜாராம் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விளையாட்டு விழாவில் பள்ளி மழலையர் குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    அவற்றில் சில நடன நிகழ்ச்சி, இசைநாற்காலி, 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பலூன் ஓட்டப்பந்தயம், சங்கிலித்தொடர் ஓட்டப்பந்தயம், உருட்டுப் பந்தாட்டம், வட்டத்தில் வைத்தாடுதல், தறி ஓட்டம், தொடர் பந்தாட்டம், பந்தை பிடி, கையிறு இழுத்தல் போட்டி, தேடிப்பார் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டியில் பங்குபெற்று, வெற்றிபெற்ற குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல் ஆகியோர் வழங்கினர்.

    விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் புவனேஷ்வரி, குருமூர்த்தி, மணிமேகலை, பிரவீனா மற்றும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.

    Next Story
    ×