search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் மலர்காவடி விழா
    X

    கழுகாசலமூர்த்தி கோவில் மலர்காவடி விழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அரோஹரா கோஷத்துடன் மலர் காவடி எடுத்துவந்த காட்சி.

    கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் மலர்காவடி விழா

    • கழுகுமலையில் பிரசித்தி பெற்ற குடவரை கோவிலான கழுகாசல மூர்த்தி கோவில் அமைந்துள்ளது.
    • முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில் 9-ம் ஆண்டு மலர் காவடி விழா நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் பிரசித்தி பெற்ற குடவரை கோவிலான கழுகாசல மூர்த்தி கோவில் அமைந்துள்ளது. பக்தர்களால் தென்பழனி என அழைக்கப்படும் இக்கோவில் ஆண்டு தோறும் உலக மக்களின் நன்மை, விவசாயம் செழிக்க வேண்டும், மழை பெய்ய வேண்டும் என மலர் காவடி எடுத்து வழிபாடும் விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    இதேபோல் இந்த ஆண்டு முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில் 9ம் ஆண்டு மலர் காவடி விழா நடைபெற்றது. இதையொட்டி கழுகாசல மூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளை சார்பில் காவடி மேள தளம் முழங்க மயில் காவடி ஆட்டம் நடைபெற்றது. மயில் காவடி ஆட்டத்துடன் நடைபெற்ற விழாவில் அதிகமான சிறுவர், சிறுமிகள் பெரியவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் உள்ள திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரம்மச்சாரிய சுவாமிகள், தருமை யாதீனம் கயிலை மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் உள்ளிட்ட முக்கிய ஆதினங்களை சேர்ந்த சுவாமிகள் பங்கேற்று அருளுரை வழங்கி மலர் காவடி ஊர்வலத்தினை தொடங்கி வைத்தனர்.

    குழந்தைகள் பெரியவர்கள் என ஏராளமான பக்தர்கள் மலர் காவடி எடுத்து சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கழுகாசலமூர்த்தி கோவில் கிரிவலம் பாதை வழியாக அரோகரா என முழக்கம் எழுப்பியும் முருகன் துதி பாடி மலர் காவடி எடுத்து ஊர்வலமாக சுற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பக்தர்கள் கொண்டு வந்த மலர்காவடி பூக்களை கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் நடை பெற்றது.

    Next Story
    ×