என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்பாக்கம் அணுமின் நிலைய தொழிலாளர்கள் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    கல்பாக்கம் அணுமின் நிலைய தொழிலாளர்கள் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம்

    • பல்வேறு அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
    • கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலைய நகரியத்தின் ஜி.எஸ்.ஓ அலுவலகம் அருகில் இன்று கல்பாக்கம் ஆட்டாமிக் எனர்ஜி காண்ட்ராக்ட் ஒர்க்கர்ஸ், லேபர் யூனியன், இந்திய தொழிற்சங்க மைய்யம் அமைப்பினர் மாவட்ட துணை தலைவர் பழனிசாமி தலைமையில் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் தி.மு.க., அ.தி.மு.க. தவிர்த்து சி.ஐ.டி.யூ, விடுதலை சிறுத்தைகள், மக்கள் வாழ்வுரிமை கட்சி, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    கல்பாக்கம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளியாக நீண்ட காலம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், தொழில் கூட்டுறவு சங்கம் துவங்க வேண்டும், மருத்துவ வசதி, போனஸ் வேண்டும், பண்டிகைகால விடுமுறை தேவை, பணிநீக்கம் செய்த டிரைவர், கெஸ்ட் அவுஸ் ஊழியர்களுக்கு மீண்டும் வேலை தேவை, உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். கல்பாக்கம் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×