என் மலர்
உள்ளூர் செய்திகள்

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய விழிப்புணர்வு பயணம்: இயக்குனர் துவக்கி வைத்தார்
- தமிழகத்தில் உள்ள ஏழு முக்கிய மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் மூன்று மாவட்டங்களுக்கு பயணம்.
- ஆகஸ்ட் 14ம் தேதிவரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மாமல்லபுரம்:
கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், அறிவியல் சங்கம், அறிவியல் பாரதீய சங்கம், தேசிய அறிவியல் அருங்காட்சியகம் ஆகியவை ஒருங்கிணைந்து ஆண்டு தோறும் அணு அறிவியல் விழிப்புணர்வு பயணம் நடத்துகிறது. இந்த ஆண்டிற்கான விழிப்புணர்வு பயண வாகனத்தை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
கதிர்வீச்சு கண்டுபிடிப்பு கருவி, அணுஉலை செயல் விளக்க எலக்ட்ரானிக் வரைபடம், இயற்கை வளம், விவசாயம், மீன்பிடி குறித்து புகைப்படங்கள், அணுவின் மாதிரி உருளை, உள்ளிட்ட அறிவியல் சாதனங்களுடன் "நாட்டின் சேவையில் அணுக்கள்" என்ற தலைப்பில், பிரத்யேக விழிப்புணர்வு கண்காட்சி வாகனம், தமிழகத்தில் உள்ள ஏழு முக்கிய மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் மூன்று மாவட்டங்களுக்கு பயணம் சென்று ஆகஸ்ட் 14ம் தேதிவரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
துவக்க நிகழ்ச்சியில் அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அஜித்குமார் மொகந்தி, அருங்காட்சியகம் இயக்குனர் சாதனா, கதிரியக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழும இயக்குனர் வித்யா சுந்தர்ராஜன், தலைவர் சுப்பிரமணியன், செயலர் கோபால்சாரதி, தொழில்நுட்ப விழிப்புணர்வு பிரிவு தலைவர் ஜலஜா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






