search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூர் அருகே  கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
    X

    பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழை முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் வழங்கிய போது எடுத்த படம்.

    வாசுதேவநல்லூர் அருகே கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

    • கலைஞரின் படைப்புகளில் சமூக நீதி என்ற தலைப்பில் பேசிய மாணவி காவிய பிரியா முதல் பரிசை பெற்றார்.
    • போட்டியில் வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எழிலரசி முதல் இடத்தை பிடித்தார்.

    சிவகிரி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் நூற்றா ண்டு விழா கருத்த ரங்கம் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் முன்னாள் பேரவைச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நேற்று வாசுதேவநல்லூர் அருகே வியாசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புளியங்குடி டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சங்கரன் கோவில் ராஜா எம்.எல்.ஏ., வாசுதேவநல்லூர் சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் சிற்புரையாற்றினர்.

    வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலைஞரின் படைப்புகளில் சமூக நீதி என்ற தலைப்பில் பேசிய மாணவி காவிய பிரியா முதல் பரிசையும், தமிழ் மொழியின் எழுச்சிக்கு கலைஞர் செய்த சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் பேசிய மாணவி சூரியகலா இரண்டாவது பரிசையும், மகளிர் நலனில் கலைஞர் என்ற தலைப்பில் பேசிய மாணவி சாகிதா மூன்றாம் பரிசையும் வென்றனர்.

    இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது என்ற தலைப்பில் பேசிய மாணவர்களில் வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எழிலரசி முதல் இடத்தையும், கரிவலம்வந்தநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கவிதா இரண்டாவது இடத்தையும், சேர்ந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ராமர் மூன்றாவது இடத்தையும் வென்றனர்.

    கலைஞரின் நூற்றாண்டு விழா சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கத்தில், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் சிறப்பாக உரையாற்றிய மாணவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் நாகராஜன், இணைச்செயலாளர் சாந்தி, துணைச் செயலாளர் ரேவதி, சார்பு செயலாளர் பாஸ்கர், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, புளியங்குடி நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்தரபாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, முதன்மை கல்வி அலுவலர் முத்தையா, சிவகிரி தாசில்தார் ஆனந்த், துணை தாசில்தார் வெங்கடசேகர், வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்து நாடார் உறவின் முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×