என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலை செய் கற்பி- நிறைவு விழாவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்
    X

    மதக்ககொண்டப்பள்ளி அரசு மாதிரி பள்ளியில் நடைபெற்ற கலை செய்- கற்பி நிறைவு விழாவையொட்டி பயிற்சி பயின்ற ஆசிரியர்களுக்கான சான்றிதழ்களை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

    கலை செய் கற்பி- நிறைவு விழாவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்

    • ஐந்து அணிகளாக 20 நாட்களில் 785 ஆசிரியரியர்கள் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.
    • பயிற்சி பயின்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் சான்றிதழ்களை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், மதக்கொண்டப்பள்ளி அரசு மாதிரி பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் 'கலை செய் கற்பி" ஆசிரியர்களுக்கான கலைப் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் கலை பயிற்சி பயின்ற ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் சான்றிதழ்களை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியுள்ளதாவது:-

    தமிழக முதல் அமைச்சர் தலைமையிலான அரசு, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கென்று பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளி ஆசிரியரியர்களுக்கென ஒரு கலைப் பயிற்சி முகாம் மதகொண்டப்பள்ளியில் நடந்து முடிந்திருக்கிறது.

    அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இந்த முகாமில் பல்வேறு கலைகளைக் கற்றுக்கொண்டனர்.நாடகம், தெருக்கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், கம்பத்தாட்டம், அழிவின் உயிரிழப்பு எனும் தலைப்பில் வீணாகும் பொருட்களிலிருந்து கலைப்பொருட்கள் உருவாக்கம், குறும்பட உருவாக்கம், கதைசொல்லல், பறையிசை, சிலம்பாட்டம், பொம்மலாட்டம், பாவனை நாடகம் தற்காப்புக் கலைகள் ஆகிய கலைகளை மூன்று நாட்கள் பயிற்சி பெற்று தாங்கள் கற்றுக்கொண்டவற்றை இன்று மேடையில் அரங்கேற்றினர். இப்படி ஐந்து அணிகளாக 20 நாட்களில் 785 ஆசிரியரியர்கள் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.

    கலைகளில் மட்டுமல்லாது ஒவ்வொரு நாளும் ஒரு கருத்தாளர் வந்து அவர்களுக்கான சிந்தனை பயிற்சியையும் அளித்தனர்.

    ஆசிரியரியர்கள் கலைத்திறமையோடு இருப்பது மிகவும் முக்கியம். இப்பயிற்சி மூலம், ஆசிரியர்களுக்குள் உள்ள திறமைகள் வெளிக ்கொணரப்பட்டுள்ளது. பாடப்புத்தகத்தில் உள்ளதை மட்டும் நடத்தும் காலம் இப்போது இல்லை. இப்பயிற்சி முகாம் கற்பித்தலில் மாற்றங்களை ஏற்படுத்தும். ஆசிரியர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட கலைகளின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கற்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில்,ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, மதக்கொண்டப்பள்ளி மாதிரி பள்ளி தாளாளர் மேரு மில்லர், திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிமலர், ஆசிரியர்கள் பேட்ரிக், இதயத்துல்லா மற்றம் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×