என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    தொழில் அதிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    வண்டலூர்:

    மறைமலைநகர் என்.எச்.2 கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் திருமாறன் (வயது 46). தொழில் அதிபரான இவர் கடந்த 27-ந்தேதி காலையில் வீட்டில் இருந்து வழக்கம் போல் தனது காரில் தனியாக ஒரகடத்திற்கு தொழில் சம்பந்தமாக சென்றுவிட்டு மீண்டும் அதே காரில் மதியம் சிங்கபெருமாள்கோவில் ஒரகடம் சாலையில் மறைமலைநகர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

    கார் மறைமலைநகர் எல்லையை நோக்கி வளைவில் திரும்பிய போது அந்த கார் மீது முன்னால் வந்த கார், பின்னால் வந்த கார் என்று 2 கார்கள் மோதின. அந்த கார்களில் இருந்த டிரைவர்கள் தப்பிச்சென்று விட்டனர்.

    அப்போது ஏற்கனவே சாலை வளைவில் மறைந்து இருந்த ஒரு கும்பல் அவர்கள் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை தொழில் அதிபரின் கார் மீது வீசியது. வெடிகுண்டு டிரைவரின் சீட் மேல் பகுதியில் விழுந்ததால் குண்டு வெடித்து காரின் மேல் பகுதி சேதம் அடைந்தது. இதில் அதிஷ்டவசமாக திருமாறன் உயிர் தப்பினார். 

    மீண்டும் அந்த கும்பல் மற்றொரு குண்டை வீச முயன்ற போது திருமாறன் தான்  வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட முயன்றார். இதனை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் 2 பேரும், செங்கல்பட்டு கோர்ட்டில் 2 பேரும் சரண் அடைந்தனர்.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேர் காட்டாங்கொளத்தூரில் பதுங்கி இருப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு காட்டாங்கொளத்தூரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த படப்பையை சேர்ந்த வெங்கட் (30), தாம்பரத்தை சேர்ந்த யுவராஜ்(28), ரமேஷ்(29), கூடுவாஞ்சேரியை சேர்ந்த சரவணன்(30), நெய்வேலியை சேர்ந்த நாயகம்(30), ஆதனூரை சேர்ந்த பிரவீன்(25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் எம்.கே.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் வெங்கடேஷ், துணை தலைவர் ஜார்ஜ், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    வண்டலூர்:

    நந்திவரம்–கூடுவாஞ்சேரி பேரூராட்சி கூட்டம் பேரூராட்சி தலைவர் எம்.கே.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் வெங்கடேஷ், துணை தலைவர் ஜார்ஜ், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மகாலட்சுமிநகர், கற்பகாம்பாள்நகர், நந்தீஸ்வரர் காலனி, பெரிய தெரு, தேரடி மேட்டு தெரு, கோவிந்தராஜபுரம், நந்திவரம் காலனி, கிருஷ்ணாபுரம், காமராஜபுரம், டிபன்ஸ்காலனி, கம்பர் தெரு, கே.கே.நகர், மீனாட்சிநகர், பூங்கா தெரு, திருவள்ளுவர் தெரு, பாலாஜிநகர், அருள்நகர், ஆகிய 17 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்பில் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    மேலும் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    காஞ்சீபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
    காஞ்சீபுரம்:

    தர்மபுரி மாவட்டம் பள்ளிபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (26). இவர் உத்திரமேருர் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். இவர் நெல்வாய்க்கு மோட்டார் சைக்கிளில் உத்திரமேரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    நெல்வேலி அருகே சென்ற போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மீது வாகனம் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கி சிகிச்சை பலனின்றி சக்திவேல் பலியானார், பிரபாகரன் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து சாலவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    சட்டதிருத்தத்தை திரும்ப பெறக்கோரி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் சங்க தலைவர் ஸ்ரீராம் தலைமையில் வக்கீல்கள் வாயில் கருப்பு துணியை கட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தாம்பரம்:

    வக்கீல்கள் சட்டத்தில் ஐகோர்ட்டு கொண்டு வந்துள்ள திருத்தங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தாம்பரத்தில் இன்று காலை இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் சங்க தலைவர் ஸ்ரீராம் தலைமையில் வக்கீல்கள் வாயில் கருப்பு துணியை கட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செயலாளர் ஓம் பிரகாஷ், இணை செயலாளர் அன்புச்செல்வன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது வக்கீல்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை திரும்பப்பெறக்கோரி அவர்கள் கண்டன உரையாற்றினர்.

    வக்கீல்களின் இந்த போராட்டத்தால் தாம்பரம் கோர்ட்டில் பணி பாதிக்கப்பட்டது

    கிண்டியில் வாகன சோதனையின் போது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    ஆலந்தூர்:

    கிண்டி நேரு நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது ஒரு ஆட்டோவில் 5 பேர் வந்தனர். அப்போது ஆட்டோவை போலீசார் நிறுத்திய போது ஒருவன் தப்பி ஓடினான். மற்ற 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    ஆட்டோவில் சோதனையிட்டபோது கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. இவர்கள் 4 பேரும் வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் கிண்டி நேரு நகரைச் சேர்ந்த சரத்குமார், மணி, குபேந்திரன், சதீஷ் என்பது தெரிய வந்தது. தப்பி ஓடிய மாதவனை தேடி வருகிறார்கள். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் விசாரணை நடத்தி வருகிறார்.

    மோசமான வானிலை நிலவியதால் அந்தமான் புறப்படும் விமானம் 5 மணி நேரம் தாமதமாக சென்றது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து அந்தமானுக்கு இன்று காலை 5 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் 146 பயணிகள் இருந்தனர்.

    ஆனால் அந்தமானில் மோசமான வானிலை நிலவியதால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அங்கு நிலைமை சீரானதும் விமானத்தை இயக்க முடிவு செய்து இருந்தனர்.

    ஆனால் அந்தமானில் மோசமான வானிலை தொடர்ந்து நீடித்து கொண்டு இருந்ததால் விமானம் 5 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    அந்தமானில் காலை 10 மணிக்கு வானிலை சீரடைந்தது. இதையடுத்த 10.30 மணிக்கு ஏர்இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. சுமார் 5 மணி நேர தாமதத்தால் விமானத்திலேயே பயணிகள் காத்திருந்தனர்.

    வேளச்சேரியில் வங்கி ஊழியர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வேளச்சேரி:

    வேளச்சேரி, வி.ஜி.பி செல்வா நகரில் வசித்து வருபவர் விக்னேஷ். தனியார் வங்கி ஊழியர் இவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். திரும்பி வந்த போது வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே 2 மர்ம வாலிபர்கள் இருந்தனர். அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் கூச்சலிட்டார் பொதுமக்கள் திரண்டு வந்து ஒருவனை மடக்கி பிடித்தனர். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான்.

    விசாரணையில் பிடிபட்ட வாலிபர் கொரட்டூரை சேர்ந்த சத்யா என்பதும், தப்பி ஓடியது கூட்டாளியான பால் பாண்டியன் என்பதும் தெரிந்தது. இந்தநிலையில் இன்று காலை பால்பாண்டியனை வேளச்சேரி போலீசார் கைது செய்தனர்.

    புழுதிவாக்கம் பறக்கும் ரெயில் நிலையத்தில் கம்பி திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் அடுத்த மடுவன்கரையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சத்தியராஜ், புகழேந்தி ஆகியோர் 2 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் 3 பேரும் ஒரு மினி வேனில் புழுதிவாக்கம் பறக்கும் ரெயில் நிலைய கட்டுமான பணிக்கு வைத்திருந்த கம்பிகளை திருடிக் கொண்டிருந்தனர்.

    இதை பார்த்த ரெயில் நிலைய காவலாளி சத்தம் போட்டார். உடனே ஊழியர்கள் மடக்கி பிடித்து ஆதம்பாக்கம் போலீசில் அவர்களை ஒப்படைத்தனர். அவர்கள் திருடிய கம்பியின் மதிப்பு ரூ. 70 ஆயிரமாகும்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் காசநோயை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்க ஏதுவாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் காசநோயை முற்றிலும் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தேசிய காச நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் காசநோய் தடுப்பு களப்பணியாளர்களுக்கு ரூ.6.79 லட்சம் மதிப்பீட்டில் 14 இரு சக்கர வாகனங்களை காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமி வழங்கினார்.

    இதன் மூலம் களப்பணியாளர்கள் காச நோயினால் பாதிப்படைந்தவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு மாத்திரைகள் வழங்குவது, நோய் தடுப்பு தொடர்பான ஆலோசனைகள் அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவர்.

    இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல், காய்ச்சல், எடை குறைவு போன்றவைகள் இருந்தால் அவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் கஜலட்சுமி தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர்.மீனாட்சி மற்றும் டாக்டர்கள் பூபதி, மதன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    தொழில் அதிபரை வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கொலை முயற்சி வழக்கு தொடர்பாக இதுவரை 4 பேர் கோர்ட்டில் சரண் அடைந்து இருக்கிறார்கள்.
    செங்கல்பட்டு:

    மறைமலைநகர், கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் திருமாறன். தொழில் அதிபர். நேற்று முன்தினம் அவர் செல்லிமேடு கூட்டுச் சாலையில் காரில் சென்ற போது மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி தாக்கினார்.

    இதில் திருமாறன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது குறித்து மறைமலை நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த வழக்கு தொடர்பாக திருக்குழுக்குன்றம் கோர்ட்டில் மகேஷ், மாரியப்பன் ஆகியோர் சரண் அடைந்தனர். இதையடுத்து இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த நாயகம், கூடுவாஞ்சேரி சரவணன், கேரளாவை சேர்ந்த ரமேஷ், தாம்பரம் யுவராஜ், ராஜ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே செங்கல்பட்டு கோர்ட்டில் தாம்பரத்தை சேர்ந்த பிரபு, நின்னாகாட்டூர் ராமு ஆகியோர் சரண் அடைந்து உள்ளனர்.

    இந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக இதுவரை 4 பேர் கோர்ட்டில் சரண் அடைந்து இருக்கிறார்கள். 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    முக்கிய குற்றவாளி இன்னும் சிக்கவில்லை என்று தெரிகிறது. அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். கோர்ட்டில் சரண் அடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்து இருக்கிறார்கள்.

    ×