என் மலர்
செய்திகள்

மோசமான வானிலை: அந்தமான் புறப்படும் விமானம் 5 மணி நேரம் தாமதம்
மோசமான வானிலை நிலவியதால் அந்தமான் புறப்படும் விமானம் 5 மணி நேரம் தாமதமாக சென்றது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து அந்தமானுக்கு இன்று காலை 5 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் 146 பயணிகள் இருந்தனர்.
ஆனால் அந்தமானில் மோசமான வானிலை நிலவியதால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அங்கு நிலைமை சீரானதும் விமானத்தை இயக்க முடிவு செய்து இருந்தனர்.
ஆனால் அந்தமானில் மோசமான வானிலை தொடர்ந்து நீடித்து கொண்டு இருந்ததால் விமானம் 5 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
அந்தமானில் காலை 10 மணிக்கு வானிலை சீரடைந்தது. இதையடுத்த 10.30 மணிக்கு ஏர்இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. சுமார் 5 மணி நேர தாமதத்தால் விமானத்திலேயே பயணிகள் காத்திருந்தனர்.
Next Story






