என் மலர்
காஞ்சிபுரம்
மலேசியாவிற்கு அப்பள பொட்டலங்களில் மறைத்து கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்புள்ள போதை பொருளை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் விமானத்தில் பெருமளவில் போதை பொருள் கடத்த இருப்பதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சென்னையில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஷாஜகான்(வயது 52) என்பவர் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு செல்ல வந்திருந்தார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி உடைமைகளை சோதனை செய்தனர்.
அவருடைய சூட்கேசில் 100 அப்பள பொட்டலங்கள் இருந்தது. அப்பள பொட்டலங்களை பிரித்து பார்த்தபோது அதில் 'கேட்டமைன்' என்ற போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். ரூ.2 கோடி மதிப்புள்ள 5 கிலோ எடை கொண்ட அந்த போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஷாஜகான் விமான பயணத்தை ரத்துசெய்த அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளுடன் அவரை கைது செய்து சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
ஷாஜகான் பணத்துக்காக போதை பொருளை கடத்திச்செல்ல இருந்ததாக தெரியவந்தது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம் காப்பகத்தில் சிறுவர், சிறுமிகளும் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று வெளியான தகவலையடுத்து சிறுவர், சிறுமிகள் யாரும் கடத்தப்படவில்லை என்றும், அவர்கள் குடும்பத்தினருடன் பத்திரமாக உள்ளனர் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
தாம்பரம்:
மேற்கு தாம்பரம், சி.டி.ஓ. காலனியில் “உதவும் உள்ளம்” என்ற பெயரில் தனியார் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு முறைகேடு நடப்பதாக மாவட்ட கலெக்டர் கஜலட்சுமிக்கு புகார்கள் வந்தன.
கலெக்டரின் உத்தரவுப்படி கடந்த 28-ந்தேதி மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தினர் காப்பகத்தில் சோதனை நடத்தினர். அப்போது முறையான பராமரிப்பு இல்லாமலும் உரிமம் பெறாமலும் காப்பகம் செயல்பட்டு வந்தது தெரிந்தது.
இதையடுத்து கடந்த 30-ந்தேதி காப்பகத்தை மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் அங்கிருந்த 32 சிறுவர், சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் அங்கீகாரம் பெற்ற காப்பகத்துக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் மாவட்ட குழந்தைகள் நல குழுமம் சார்பில் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது.
அதில், மூடப்பட்ட காப்பகத்தின் பதிவு ஆவணங்களில் 41 சிறுவர், சிறுமிகள் இருந்ததாக உள்ளது. ஆனால் 32 பேர் மட்டும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். 9 சிறுவர், சிறுமிகள் மாயமாகி உள்ளனர். மேலும் 2 சிறுமிகள் ஆள் மாறாட்டம் செய்து ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இது குறித்து உரிய விசாரணை நடத்தி காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. புகாரை பெற்றுக் கொண்டதற்கான ரசீதை (சி.எஸ்.ஆர்.) மட்டும் கொடுத்து இருக்கிறார்கள்.
இதற்கிடையே காப்பகத்தில் இருந்த 11 சிறுவர், சிறுமிகளும் கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி தாம்பரம் போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, “காப்பகத்தில் இருந்த சிறுவர், சிறுமிகள் யாரும் கடத்தப்படவில்லை. அங்கிருந்த சிறுவர்களின் வீட்டு முகவரியை பெற்று வீடு, வீடாக ஆய்வு செய்தோம். அவர்கள் குடும்பத்தினருடன் பத்திரமாக உள்ளனர்.
குழந்தைகள் நல குழு மத்தினர் அவர்களை ஒப்படைக்க சொன்னால் அழைத்து வந்து காட்ட தயாராக உள்ளோம். இதே போல் 2 சிறுமிகள் ஆள் மாறாட்டம் செய்து ஒப்படைக்கப்படவில்லை” என்றார்.

பெருங்குடியில் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் 25 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த பெருங்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன்(வயது 36). இவரும், இவருடைய மனைவியும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு சாவியை அருகில் உள்ள ஒரு மறைவான இடத்தில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டனர்.
பின்னர் கமலக்கண்ணன் திரும்பி வந்து பார்த்தபோது, சாவி வைக்கப்பட்ட இடத்தில் இருந்து சற்று தள்ளி இருந்ததை கண்டார்.
வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் சோதனை செய்த போது அதில் வைத்து இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் திருட்டு போய் இருப்பது தெரிந்தது. கமலக்கண்ணன், வீட்டை பூட்டி விட்டு சாவியை மறைவான இடத்தில் வைத்து விட்டு செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்று உள்ளனர்.
இதுபற்றி துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மாமல்லபுரத்தில் சாலை தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
மாமல்லபுரம்:
சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அதில் 3 வாலிபர்கள் இருந்தனர். மாமல்லபுரத்தை அடுத்த கிருஷ்ணன்காரணை அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையின் தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.
இதில் கார் சுமார் 100 அடி தூரத்துக்கு உருண்டு தலைகுப்புற கவிழ்ந்தது. சினிமா காட்சியில் வருவதை போல் கார் பலமுறை உருண்டதை அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
காரில் இருந்த 3 வாலிபர்களும் படுகாயம் அடைந்து கூச்சலிட்டனர். அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காயம் அடைந்த 3 வாலிபர்களும் ஈரோட்டை சேர்ந்த சம்ஷாத், ஆரிய பிரகாஷ் மற்றும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

கூடுவாஞ்சேரியை அருகே மோட்டார் சைக்கிளில் மீது பஸ் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார்
தாம்பரம் :
கூடுவாஞ்சேரியை அடுத்த காட்டாங்கொளத்தூர் கீழக்கரனை பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன். கார் டிரைவர். இவரது மகன் நவீண்குமார்.கொளப்பாக்கத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி.இ. 2–ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு நவீண்குமார் அதே பகுதியை சேர்ந்த நண்பர் பிரகாசுடன் மோட்டார் சைக்கிளில் தாம்பரம் நோக்கி சென்றார்.
கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையம் எதிரே செல்லும் போது பின்னால் செஞ்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நவீண்குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். பிரகாஷ் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவருக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பெரிய காஞ்சீபுரம் பருத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தமோதரன் (29). இவரது நண்பர் யுவராஜ். இருவரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். வண்டியை யுவராஜ் ஓட்டினார்.
சென்னை-பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் சேக்கான்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி மோட் டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். தாமோதரன் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த யுவராஜ் காஞ்சீபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொன்னேரி பழவேற்காடு குளத்துமேட்டை சேர்ந்தவர் முத்து (23) கூலி தொழிலாளி. இவரது நண்பர்கள் அஜித், சின்னர். நேற்று மாலை 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பொன்னேரியில் இருந்து பழவேற்காடு நோக்கி சென்றனர்.
பொன்னேரி அருகே திருபாலைவனம் என்ற இடத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி 3 பேரும் தவறி கீழே விழுந்தனர். இதில் முத்துவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து இறந்தார்.

மைசூரு பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு இந்திய ஓநாய் கொண்டு வரப்பட்டது.
வண்டலூர்
மைசூரு பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு இந்திய ஓநாய் கொண்டு வரப்பட்டது.
வண்டலூர் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மைசூரு ஸ்ரீசாமராஜேந்திர உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவிற்கு விலங்குகள் பரிமாற்ற முறை திட்டத்தின் கீழ் வசந்தன் என்ற இந்திய ஆண் ஓநாய் என்று நேற்று காலை கொண்டு வரப்பட்டது. இதன் வயது 7 மாதம் ஆகும். இத்துடன் சேர்த்து இந்த பூங்காவில் உள்ள இந்திய ஓநாய்களின் எண்ணிக்கை 2- ஆக உயர்ந்துள்ளது.
இதனை பார்வையாளர்கள் நேற்று முதல் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஓநாய்கள் நாய் குடும்பத்தை சேர்ந்த விலங்காகும். இந்த குடும்பத்தை சேர்ந்த 5 இனங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. அவை இந்திய ஓநாய், நரி, சிவப்பு குள்ள நரி, இந்திய குள்ள நரி மற்றும் செந்நாய் ஆகும். இவை அனைத்தும் தோற்றத்தில் ஒத்து இருந்தாலும் நிறம், அளவு, நீளம் மற்றும் முடிப்போர்வையின் வளமை ஆகியவற்றை வைத்து வேறுபடுத்தப்படுகின்றன.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தை இயக்க வேண்டிய விமானி வராததால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் சுமார் 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு காலை அந்தமானுக்கு விமானம் புறப்பட்டு சென்றது
ஆலந்தூர் :
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து அந்தமானுக்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய 148 பேர் சோதனைகளை முடித்துக்கொண்டு ஓய்வறையில் காத்திருந்தனர்.
ஆனால் காலை 6 மணி வரை பயணிகள் யாரையும் விமானத்தில் ஏற்றப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், கோஷங்களை எழுப்பினார்கள். உடனே விமான நிறுவன அதிகாரிகள் வந்து பயணிகளை சமாதானம் செய்தனர்.
விமானத்தை இயக்க வேண்டிய விமானி வராததால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், மாற்று விமானி வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு காலை 8.15 மணிக்கு அந்தமானுக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இதனால் விமான நிலையத்தில் 3 மணி நேரத்துக்கு மேலாக பயணிகள் அவதி அடைந்தனர்.
இதேபோல் கொழும்பு, டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதற்கான காரணங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.