என் மலர்
காஞ்சிபுரம்
திருப்போரூரில் 8-ம் வகுப்பு மாணவன் தீக்குளித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
திருப்போரூர் மடம் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் டில்லிபாபு (வயது 13) திருப்போரூர் வணிகர் வீதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று இரவு வீட்டில் இருந்த டில்லிபாபு மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீவைத்துக் கொண்டான். அவரது அலறல் சத்தம்கேட்டு வந்த பெற்றோர் உடனடியாக தீயை அணைத்து அவனை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டில்லிபாபு ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
பள்ளிக்கு பெற்றோரை அழைத்து வரும்படி நிர்வாகத்தினர் கூறியதால் டில்லிபாபு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்க்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:
வந்தவாசி அருகே உள்ள அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெரினா. இவருக்கு 3 குழந்தைகள் இருந்தனர். ஜெரினாவின் கணவர் மரணம் அடைந்த பின்னர், ஜெரினாவுக்கும் உத்தரமேரூர் அடுத்த குப்பையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெரினாவையும், அவரது மூன்று குழந்தைகளையும் குப்பையநல்லூர் கிராமத்துக்கு அழைத்துவந்து குடும்பம் நடத்தியுள்ளார் அருள்.
இந்நிலையில் 2013ம் ஆண்டு ஜெரினா, அருள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மூன்று குழந்தைகளையும் கணவர் குடும்பத்தாரிடம் விட்டுவரும்படி அருள் கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஜெரினா, வீட்டருகே இருந்த கிணற்றில் 3 குழந்தைகளையும் வீசியதுடன் தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மூன்று குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்துவிட்டன. உயிருக்குப் போராடிய ஜெரினாவை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதையடுத்து குழந்தைகளை கொன்று தற்கொலைக்கு முயன்றதாக ஜெரினா மீது உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில் ஜெரீனா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குழந்தைகளை கொன்ற ஜெரினாவுக்கு மூன்று ஆயுள் தண்டனையும், 3000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்புகூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 36 பேருக்கு தையல் இயந்திரங்களை கலெக்டர் கஜலட்சுமி வழங்கினார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்ப்புகூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 36 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும், ஸ்ரீபெரும்புதூர் சிக்கராயபுரம் கிராமத்தை சேர்ந்த 8 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகளையும் கலெக்டர் வழங்கினார்.
மேலும் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு ரத்ததானம் செய்த 13 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சவுரிராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் பவணந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி ஒருவர் பலியானார்
காஞ்சீபுரம்:
வாலாஜா அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (58). காஞ்சீபுரம் அடுத்த காரை கிராம பகுதிகளில் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று மாலை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விபத்து குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் - மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்
காஞ்சீபுரம்:
சின்ன காஞ்சீபுரம், பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 32). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ஆனந்தி (29). இவர்களுக்கு மோகேஷ் என்ற மகனும், 1½ வயதில் மோனிகா என்ற மகளும் உள்ளனர்.
நேற்று மாலை செல்வம் மேல்மலையனூர் கோவிலுக்கு குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். உத்திரமேரூரை அடுத்த கருவேப்பம்பூண்டி அருகே சென்ற போது எதிரே வந்த மினி லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே செல்வமும், ஆனந்தியும் உடல் நசுங்கி உயிர் இழந்தனர். தூக்கி வீசப்பட்ட குழந்தைகள் மோகேஷ், மோனிகா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் உத்திரமேரூர் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்றோரை இழந்த குழந்தைகள் இருவரும் சிகிச்சைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அந்தமானில் மோசமான வானிலை நிலவியதால் சென்னையில் இருந்து செல்ல இருந்த விமானம் 8 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு அந்தமானுக்கு 148 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. ஆனால் அந்தமானில் மோசமான வானிலை நிலவியதால் அதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு செல்ல முடியவில்லை. சுமார் 8 மணி நேரம் தாமதமாக நண்பகல் 1 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் அந்தமான் செல்ல இருந்த பயணிகள் அவதிக்குள்ளாயினர்.

சதுரங்கப்பட்டினத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்பாக்கம்:
கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், நெரும்பூர் மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய துணை மின்நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
எனவே சதுரங்கப்பட்டினம், வெங்கப்பாக்கம், ஆரம்பாக்கம், புதுப்பட்டினம், வாயலூர், நெரும்பூர், திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என செங்கல்பட்டு மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்து உள்ளார்.