என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோசமான வானிலை காரணமாக 8 மணி நேரம் தாமதமாக சென்ற அந்தமான் விமானம்
    X

    மோசமான வானிலை காரணமாக 8 மணி நேரம் தாமதமாக சென்ற அந்தமான் விமானம்

    அந்தமானில் மோசமான வானிலை நிலவியதால் சென்னையில் இருந்து செல்ல இருந்த விமானம் 8 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு அந்தமானுக்கு 148 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. ஆனால் அந்தமானில் மோசமான வானிலை நிலவியதால் அதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனால் அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டு செல்ல முடியவில்லை. சுமார் 8 மணி நேரம் தாமதமாக நண்பகல் 1 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் அந்தமான் செல்ல இருந்த பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
    Next Story
    ×