என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழப்பாவூர் அருகே கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு
    X

    பத்திரகாளியம்மன் கோவில் முன்பு தண்ணீர்  குளம் போல் தேங்கி கிடக்கும் காட்சி.

    கீழப்பாவூர் அருகே கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு

    • கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக அப்பகுதி முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
    • வீணாகும் தண்ணீர், சாக்கடையுடன் கலப்பதால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தென்காசி:

    கீழப்பாவூர் யூனியனுக்கு உட்பட்ட குறும்பலாப்பேரி கிராமத்திற்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    அங்குள்ள பத்திரகாளியம்மன் கோவில் முன்பு கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக அப்பகுதி முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. மேலும் வீணாகும் தண்ணீர், சாக்கடையுடன் கலக்கிறது.

    இதனால் அதன் அருகில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடைப்பு ஏற்பட்ட குழாயை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×