என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

நகை-பணம்,2 குழந்தைகளுடன் இளம்பெண் ஓட்டம்

- குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்ற செல்லம்மாள் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை.
- புகாரின்பேரில் மாயமான செல்லம்மாள் குறித்து மாரண்ட ஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் மாரண்ட ஹள்ளி அருகே அத்திமுட்லூ காலனியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று குழந்தைகளுடன் வீட்டை விட்டு சென்ற செல்லம்மாள் அதன்பிறகு வீடு திரும்ப வில்லை. பல்வேறு இடங்களில் விசாரித்தும் அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இது குறித்து போலீசில் புகார் செய்துள்ள சுரேஷ்குமார் தனது மனைவி செல்லம்மாள் வீட்டில் இருந்த 12 பவுன் தங்க நகைகள், வங்கி பாஸ் புத்தகம், ரேஷன் அட்டை உள்ளவற்றையும் கொண்டு சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின்பேரில் மாயமான செல்லம்மாள் குறித்து மாரண்ட ஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல இண்டூர் அருகேயுள்ள ஹன்டஅள்ளி பகுதியில் மாதையன் என்பவர் தனது மகளான கல்லூரி மாணவி 10-ந்தேதி முதல் காணாமல் போய்விட்டார் என்று இண்டூர் போலீசில் புகார் செய்துள்ளார்.
மேலும் ஒகேனக்கல் அருகேயுள்ள நாடார் கொட்டாய் பகுதியை சேர்ந்த வடிவேலு என்பவர் தனது மனைவி அமுதவல்லி என்பவர் கடந்த 9-ந்தேதி முதல் மாயமாகிவிட்டார் என்று ஒகேனக்கல் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதேபோல பாப்பிரெட்டிபட்டி அருகேயுள்ள மஞ்சவாடி பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனது மனைவி கிருத்திகா என்பவர் கடந்த 7-ந்தேதி வீட்டை விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்று பாப்பிரெட்டிபட்டி போலீசில் புகார் செய்துள்ளார்.