என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே சென்னை டாக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    திருவள்ளூர் அருகே சென்னை டாக்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    • விக்னேஷ் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
    • விக்னேஷ் இரவு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த மொன்னவேடு, சீயன்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (25). இவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் 12 மணிக்கு விக்னேஷ் தனது குடும்பத்தாருடன் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல வேலைக்கு சென்றார். இரவு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 2 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் ரூபாய் 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து விக்னேஷ் புல்லரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×