என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராள்ளப்பாடி கங்கை அம்மன் கோவிலின் மூன்றாம் ஆண்டு ஜாத்திரை திருவிழா
    X

    ராள்ளப்பாடி கங்கை அம்மன் கோவிலின் மூன்றாம் ஆண்டு ஜாத்திரை திருவிழா

    • பம்பை, உடுக்கை, தாரை-தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் கரகம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.
    • விழாவின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே குமரப்பேட்டை ஊராட்சியை சேர்ந்த ராள்ளப்பாடி கிராமத்தில் ஸ்ரீ கங்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மூன்றாம் ஆண்டு ஜாத்திரை திருவிழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கரகம் ஏழு ஊரு எல்லையை மிதிக்கும் நிகழ்ச்சியும், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் பிரகாரப் புறப்பாடு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதன் பின்னர், பம்பை, உடுக்கை, தாரை-தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் மேம்பாலம் வழியாக கரகம் ராள்ளப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ கங்கை அம்மன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் கும்பம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர், மகா அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் ராள்ளப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், இளைஞர்கள், மகளிர்கள், கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×