என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரூரில் விற்பனைக்கு கொட்டி வைக்கப்பட்டுள்ள மல்லிகை.
அரூரில் குண்டுமல்லி விலை சரிவு
- கடந்த 7 தினங்களுக்கு முன்பு கிலோ ரூ. 500 வரை விற்பனை செய்யப்பட்டது.
- விலை குறைந்ததை அடுத்து மக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் கீழ்செங்கப்பாடி, குரும்பட்டி, பாரிவனம், ஆண்டியூர், வீரப்பநாய்க்கன்பட்டி, தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டியில் பொம்மிடி பகுதியிலும் அதிக அளவில் குண்டுமல்லி சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த 7 தினங்களுக்கு முன்பு கிலோ ரூ. 500 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை குறைந்து கிலோ ரூ.300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில்லரை விலையில் 100 கிராம் ரூ. 30 முதல் ரூ. 35 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைந்ததை அடுத்து மக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
வியாபாரி கூறுகையில் கடந்த வாரம் வரத்து குறைவான அளவிலேயே இருந்ததால், திருமணம், பண்டிகை சீசன் என்தால் விலை உயர்ந்தது இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
Next Story






