search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் நாளை நடக்க இருந்த  கடை அடைப்பு போராட்டம் வாபஸ்
    X

    சேலத்தில் நாளை நடக்க இருந்த கடை அடைப்பு போராட்டம் வாபஸ்

    • நாளை நடக்கவிருந்த கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.
    • ஜி.எஸ்.டி வரி, அதிகாரிகளால் வணிகர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நீக்கக் கோரி நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நாளை நடக்கவிருந்த கடை யடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி வரி, அதிகாரிகளால் வணிகர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நீக்கக் கோரி நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் பேரமைப்பு நிர்வாகிகள், வணிகர் சங்கங்கள் சார்பில் நடக்க விருந்த இந்த கடையடைப்பு போராட்டம், மாநில தலைவர் அறிவுறுத்தல்படி வாபஸ் பெறப்படுகிறது.

    மேலும் சேலம் மாவட்ட சரக்கு சேவை வரி இணை கமிஷனரை சந்தித்து, குறை களை மனுவாக கொடுத்து அரசிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×