என் மலர்
உள்ளூர் செய்திகள்

2-வது வார்டில் பெண்களிடம் விண்ணப்ப படிவத்தை பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் வழங்கிய காட்சி.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப படிவம் வழங்கல்
- காவேரிபட்டணத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.
- மகளிருக்கான உரிமை தொகை வழங்க தற்போது ரேசன் கடைகளில் விண்ணப்படிவத்தை அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் ரேசன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பெண்களுக்கு வழங்கி வருகின்றனர்.
காவேரிப்பட்டினம்,
தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்ப படிவத்தினை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வீடு, வீடாக வழங்கி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் பேரூராட்சி 2-வது வார்டு கோவிந்தப்ப முதலியார் தெருவில் காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான மனுக்கள் மற்றும் பதிவு ரசீதுக்கான டோக்கன்களை மகளிர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், வார்டு கிளைச் செயலாளர் ரவி மற்றும் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






