search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 29ந்தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்
    X

    ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் 29ந்தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தகவல்

    • ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1-ஜி என்பது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். விண்வெளிப் பிரிவில் உள்ள 7 செயற்கைகோள்களில் 7-வது செயற்கைகோளாகும்.
    • இறுதி கட்டப்பணியான கவுண்ட்டவுன் வருகிற 27 அல்லது 28-ந்தேதிகளில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2020, 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் தலா 2 ராக்கெட்டுகளை மட்டுமே ஏவியது. தொடர்ந்து நடப்பாண்டு 3-வது ராக்கெட்டை விண்ணில் ஏவ தயாராகி வருகிறது.

    குறிப்பாக சாலை, கடல் மற்றும் விமான போக்குவரத்துக்கு வழிகாட்டுவதற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். ரகத்தில் 1-ஏ, 1-பி, 1-சி, 1-டி, 1-இ, 1-எப், 1-ஜி என 7 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. இந்த செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-22, பி.எஸ்.எல்.வி. சி-24, பி.எஸ்.எல்.வி. சி-26, பி.எஸ்.எல்.வி. சி-27, பி.எஸ்.எல்.வி. சி-31, பி.எஸ்.எல்.வி. சி-32 உள்ளிட்ட ராக்கெட்டுகளில் 2013-ம் ஆண்டு ஜூலை, 2014-ம் ஆண்டு ஏப்ரல், அக்டோபர், 2015-ம் ஆண்டு மார்ச், 2016-ம் ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் உள்ளிட்ட ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட்டது.

    இதில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1-ஜி என்பது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். விண்வெளிப் பிரிவில் உள்ள 7 செயற்கைகோள்களில் 7-வது செயற்கைகோளாகும்.

    இதில் 2016-ம் ஆண்டு ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1-ஜி செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து தற்போது அதனுடைய ஆயுட்காலம் நிறைவடைந்து உள்ளது. இதற்கு மாற்றாக இஸ்ரோ என்.வி.எஸ்-2 என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. இது அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டும் செயற்கைகோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் வருகிற 29-ந்தேதி காலை 11.15 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதி கட்டப்பணியான கவுண்ட்டவுன் வருகிற 27 அல்லது 28-ந்தேதிகளில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு திட்டமிட்டப்படி, கூடுதலாக, இஸ்ரோ சூரியனை ஆய்வு செய்வதற்காக வடிவமைத்து உள்ள ஆதித்யா-எல்-1 யை நடப்பாண்டு 3-வது காலாண்டிலும் மற்றும் மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் ராக்கெட்டுக்கான 2 சோதனை ராக்கெட்டுகளில் ஒன்று இந்த ஆண்டு பிற்பகுதியில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. தொடர்ந்த ககன்யான் விண்வெளி வீரர்களின் பயிற்சி முதல் தொழில்நுட்ப மேம்பாடு வரை, வருகிற 2025-ம் ஆண்டிற்கான மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இலக்கை எட்ட இஸ்ரோ முன்னேறி வருகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

    Next Story
    ×