search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவர் டில்லர் வாங்க மானியத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
    X

    பவர் டில்லர் வாங்க மானியத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

    • 2021-2022ன் கீழ் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில், விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.
    • அதிகபட்சமாக ரூ. 85,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    தமிழ்நாடு அரசு, வேளாண்மைப் பொறியியல் துறை மூலம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், 2021-2022ன் கீழ் அண்ணா

    மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில், விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. பவர் டில்லர் இயந்திரம் வாங்கும் சிறு, குறு விவசாயிகள் மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவிகிதம் மானியமும் வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ. 85,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்பும் நாமக்கல் பகுதி விவசாயிகள், நாமக்கல் திருச்சி ரோட்டில்,

    வசந்தபுரத்தில் உள்ள வேளண்மைப் பொறியியல்

    துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு, உரிய ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்க லாம். திருச்செங்கோடு பகுதி விவசாயிகள், திருச்செங்கோட்டில் சேலம் மெயின் ரோட்டில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×