search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
    X

    அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

    • சேலம் மாவட்டத்தில் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • இதற்கு விண்ணப்பிக்க உதவிடும் வகையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையம், மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் கருமந்துறை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேர நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க உதவிடும் வகையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

    வெல்டர், பெயிண்டர் (பொது), போன்ற பிரிவுகளுக்கு 8-ஆம் வகுப்பிலும், பிட்டர், மெசினிஸ்ட் கிரைண்டர், கம்மியர் கருவிகள், மெசினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக், ஹஊ மெக்கானிக், கோபா, போன்ற பிரிவுகளுக்கு 10-ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    நேரடி சேர்க்கைக்கு வரும்பொழுது கைபேசி எண், இ மெயில் ஐ.டி, ஆதார் எண், மதிப்பெண் சான்றிதழ் (அசல்), மாற்றுச் சான்றிதழ் (அசல்), சாதிச் சான்றிதழ் (அசல்), முன்னுரிமை கோரினால் முன்னிரிமை சான்றிதழ் (அசல்) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். சாதிச் சான்றிதழ் இல்லையெனில் பொதுப்பிரிவில் தேர்ந்தெடுக்கப்படு வார்கள். விண்ணப்பக் கட்டணம் மற்றும் இதரக் கட்டணம் ரூ.245 ஆகும். பயிற்சிக் கட்டணம் இல்லை.

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்க ளுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாட நூல், வரைபடக் கருவி, காலணி, பஸ்பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் சலுகைகள் வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை பெற்றுத் தரப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.

    முதலில் வருபவர்களுக்கு முன்னிரிமை என்பதால் உடனடியாக பயிற்சியில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் குறுகிய கால தொழிற்பயிற்சிக்கான சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. நேரடி சேர்க்கை வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த தகவலை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×