என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க அணிகளின் அமைப்பாளர் பதவிகளுக்கு நேர்காணல்
- துணை அமைப்பாளர்கள் பதிவகளுக்கான நேர்காணல் நடந்தது.
- நேர்காணல் கிழக்கு மாவட்டசெயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில், நடந்தது.
கிருஷ்ணகிரி,-
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பதிவகளுக்கான நேர்காணல் நடந்தது.
கிருஷ்ணகிரி தேவராஜ் மாங்கூழ் தொழிற்சாலை வளாகத்தில், தி.மு.கவில் உள்ள 23 அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நேற்று நடந்தது.
இந்த நேர்காணல் கிழக்கு மாவட்டசெயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில், மாநில விவசாய அணி துணை செயலாளர்கள்டேம்.வெங்கடேசன், அரியப்பன், மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணைசெயலாளர்கள் கோவிந்தசாமி, சந்திரன், சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர்கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கிருபாகரன், பரிதாநவாப்,பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், நாகராசன், சித்ராசந்திரசேகர், அஸ்லாம், கோதண்டன்ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இதில், வழக்கறிஞர் அணி, வர்த்தகர் அணி, இலக்கிய அணி, விவசாய அணி, கலை இலக்கியபகுத்தறிவு பேரவை, ஆத்திராவிடர் நலக்குழு, பொறியாளர் அணி, நெசவாளர் அணி,சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, மருத்துவர் அணி, மீனவர் அணி, விவசாய தொழிலாளர்அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி, தொழிலாளர் அணி, அமைப்புச் சாரா ஓட்டுநர் அணி,விளையாட்டு மேம்பாட்டு அணி, தொண்டரணி பதவிக்கு விண்ணப்பித்திருந்த 250 -க்கும் மேற்பட்டோர் நேர்காணலில் பங்கேற்றனர்.
வருகிற 26ம் தேதி மதியம் 2 மணிக்கு மகளிரணி, 2.30 மணிக்கு மகளிர் தொண்டரணி, 3 மணிக்கு இளைஞரணி, 3.30 மணிக்கு மாணவரணி, 4 மணிக்கு தகவல் தொழில்நுட்ப அணிக்கான நேர்காணல ்நடைபெறுகிறது.






