search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் துப்புரவுத் தொழிலாளர் நிதி திட்டத்தில் கடன் பெற்றவர்களுக்கு வட்டி தள்ளுபடி -கலெக்டர் ரவிச்சந்திரன் தகவல்
    X

    தென்காசி மாவட்டத்தில் துப்புரவுத் தொழிலாளர் நிதி திட்டத்தில் கடன் பெற்றவர்களுக்கு வட்டி தள்ளுபடி -கலெக்டர் ரவிச்சந்திரன் தகவல்

    • கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
    • கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தும் பயனாளிகளுக்கு கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அபராத வட்டி தள்ளுபடி

    தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ் 1990-91 முதல் 2011-12 வரை கடன் உதவி பெற்ற தென்காசி மாவட்ட பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

    தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சி கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன் தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தின் கீழ் அசல் தொகை யினை செலுத்தும் பயனாளி களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ மாவட்ட மேலா ளர்களால் வழங்கப்படும்.

    டிசம்பர் மாதம்

    இத்திட்டம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை செயல்படுத்தப்படும். தாட்கோ, மாவட்ட மேலாளர்கள் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளபடி அசல் தொகையினை பயனாளிகளிடம் இருந்து வசூல் செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாசில்தார் அலுவலகம், 2-வது தளம், தென்காசி என்ற அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அலு வலகத் தொலைபேசி எண் 04633-214487 மற்றும் செல்போன் எண் 74488 28513 மூல மாக விவரம் பெற்று கொள்ள லாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×