என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அம்பேத்கரை அவமதித்த  சங்பரிவார் அமைப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
    X

    அம்பேத்கரை அவமதித்த சங்பரிவார் அமைப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

    • தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சங்பரிவார் கும்பலின் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

    தருமபுரி,

    அம்பேத்கரை அவமதித்த சங்பரிவார் அமைப்பை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டார்.அதன்படி நேற்று தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமை வகித்தார். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு மாநிலதுணைசெயலாளர் பாவேந்தன், கிழக்கு மாவட்ட செயலாளர் கி.ஜானகிராமன், மாவட்ட பொருளாளர் மன்னன், மாவட்ட துணைச் செயலாளர் மின்னல் சக்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் ராமன் மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன், தருமபுரி தொகுதிசெயலாளர்கள் சக்தி (எ) சமத்துவன், ஆரூர் சாக்கன் சர்மா, பென்னாகரம் கருப்பண்ணன், ,விவசாய பிரிவு துணைச்செயலாளர் கிள்ளிவளவன், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு

    திருவ ள்ளுவர்,பெரியாரை தொடர்ந்து அம்பேத்கரை காவி,திருநீர் மற்றும் குங்குமம் இட்டு அவமதிக்கும் செயலில் ஈடுபட்ட சங்பரிவார் கும்பலின் செயலை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

    Next Story
    ×