என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளியில் தேசியகொடி வண்ணத்தில் ஆடைகள் உடுத்தி மாணவர்கள் அமர்ந்துள்ள காட்சி.
கடத்தூர் கிரீன் பார்க் பள்ளியில் சுதந்திர தின விழா
- மாணவர்கள் சுதந்திரப் பற்றை ஊட்டக் கூடிய நாடகங்கள், சுதந்திர போராட்ட தியாகங்களின் வாழ்க்கை வரலாறு, ஒற்றுமை போன்ற நிகழ்ச் சிகளை தத்துவமாக நடித்துக் காட்டினார்கள்.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், கடத்தூர் கிரீன் பார்க் சி.பி.எஸ்.இ பள்ளியில் 77-வது சுதந்திர தின நாளை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் மாணவர்கள் சுதந்திரப் பற்றை ஊட்டக் கூடிய நாடகங்கள், சுதந்திர போராட்ட தியாகங்களின் வாழ்க்கை வரலாறு, ஒற்றுமை போன்ற நிகழ்ச் சிகளை தத்துவமாக நடித்துக் காட்டினார்கள்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் எவரெஸ்ட் முனிரத்தினம் மற்றும் நிர்வாக அலுவலர் ராஜா பூவிழி , பள்ளியின் முதல்வர் ஜெகதீசன், சதானந்தம், தங்கம் பிரபா, இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மேலும் பள்ளியில் பல்வேறு விளையாட்டு போட்டி, பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.






