என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் தேயிலை விளைச்சல் அதிகரிப்பு- விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    கோத்தகிரியில் தேயிலை விளைச்சல் அதிகரிப்பு- விவசாயிகள் மகிழ்ச்சி

    • கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் தேயிலை மகசூல் அதிகரித்தது.
    • தமிழக அரசு தேயிலை விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தேயிலை தொழிலையே நம்பியுள்ளனர்.

    தேயிலை தொழிற்சாலைகள் அதிகமாக இருக்கும் கோத்தகிரி பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தொழிற்சாலைகளுக்கு தேவையான தேயிலைகள் கிடைக்காமல் ஊட்டி, குன்னூர் போன்ற பகுதிகளில் இருந்து எடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக பெய்த மழையால் தேயிலை மகசூல் அதிகரித்தது. இதனால் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தற்போது அனைத்து பகுதிகளிலும் உள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து அதிகப்படியான தேயிலை அறுவடை செய்து தேயிலை தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைத்து லாபம் ஈட்டி வருகின்றனர். இதற்கிடையே தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு தினக்கூலி, உரம் விலைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு தேயிலை விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×