search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில்  வெற்றிலை விலை உயர்வு
    X

    பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வெற்றிலை விலை உயர்வு

    • தொடர்ந்து பண்டிகைகள் நடைபெற்று வருவதால் வெற்றிலை விலை உயர்ந்து வருகிறது.
    • நேற்றைய மார்கெட்டில் 2 ஆயிரம் விலை உயர்ந்து 16 ஆயிரமாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் கிராமங்களில் தொடர்ந்து பண்டிகைகள் நடைபெற்று வருவதால் வெற்றிலை விலை உயர்ந்து வருகிறது.

    கடந்த வாரம் நடந்த விற்பனையில் 12-கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ. 5ஆயிரம் முதல் அதிகபட்சமாக 14 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையானது.

    இந்நிலையில் நேற்று நடந்த ஞாயிறு சந்தைக்கு வெற்றிலை வரத்து அதிகமாகவும் இருந்தது. இருப்பினும் சித்திரை மாதம் முழுவதும் பண்டிகை நாட்கள் என்பதால் வெற்றிலை தேவை அதிகரித்துள்ளது.

    இதனால் கடந்த வாரத்தை விட ரூ.2 ஆயிரம் அதிகரித்து விற்பனையானது. நேற்று குறைந்தபட்சம் ஒரு மூட்டைக்கு ரூ 6 ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக ரூ. 16 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    கடத்தூரை சுற்றியுள்ள முத்தனூர், அஸ்த்தகிரியூர், கோம்பை, மதனாபுரி, வெள்ளியங்கரி, கெடகாரஅள்ளி, நத்தமேடு, மோட்டாங்குறிச்சி, காவேரிபுரம், உள்ளிட்ட கிராமங்களில் 100 ஆண்டுகள் பலன் தரக்கூடியது வெற்றிலைகளை தொடர்ந்து பயிர் செய்து வருகின்றனர்.

    ஒரு கவுளிக்கு 55 முதல் 60 வரையிலான வெற்றிலையும், கட்டுக்கு 110 வெற்றிலையும் வைத்து 1 முட்டைக்கு 128 கட்டுகள் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரமாக 14 ஆயிரம் வரை அதிகபட்சமாக விற்பனை செய்யப்பட்டது.

    நேற்றைய மார்கெட்டில் 2 ஆயிரம் விலை உயர்ந்து 16 ஆயிரமாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இது குறித்து முத்தனூரை சேர்ந்த வெற்றிலை விவசாயி வடிவேல் கூறும்போது கடந்த சில மாதத்திற்கு முன் 40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    படிப்படியாக விலை குறைந்து வந்த நிலையில் சில வாரம் குறைவாக விற்றது. இந்த வாரம் சற்று விலை உயர்ந்து விற்பனை செய்யபட்டது. வரும் வாரங்களில் மேலும் விலை உயரும் என எதிர்பார்த்துள்ளோம் என கூறினார்.

    Next Story
    ×