என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு:  ரசாயன நுரையும் கலந்து வருவதால்,  விவசாயிகள் பொதுமக்கள் அதிர்ச்சி
    X

    ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ரசாயன நுரையும் கலந்து வருவதால், விவசாயிகள் பொதுமக்கள் அதிர்ச்சி

    • அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வினாடிக்கு 1600 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது.
    • தென்பெண்ணை ஆற்றில் இந்த கழிவுநீர் கலந்து ரசாயன நுரை அதிக அளவு செல்கிறது.

    ஓசூர்,

    கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று, ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 1,600 கன அடி நீர் வந்தது.. அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியாகும், அணையில் 40.51 அடி நீர் இருந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து வினாடிக்கு 1600 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக திறந்து விடப்பட்டது.

    கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயன கழிவு நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

    ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேறும் தென்பெண்ணை ஆற்றில் இந்த கழிவுநீர் கலந்து ரசாயன நுரை அதிக அளவு செல்கிறது. ரசாயன நுரைகள் அதிக அளவில் குவிந்தும், பொங்கி செல்வதாலும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் ரசாயன கழிவுநீர் கலந்து வருவது குறித்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது,. சுத்தமான நீர் கெலவரப்பள்ளி அணை மற்றும் தென்பெண்ணை யாற்றில் வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×