என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் மீன்  பிடிப்பு அதிகரிப்பு
    X

    அணையில் மீன் பிடிக்க தயாராக உள்ள பரிசல்களையும். மீன் வாங்குவதற்கு குவிந்த அசைவ பிரியர்களையும் படத்தில் காணலாம்.

    புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் மீன் பிடிப்பு அதிகரிப்பு

    • ஆனைமடுவு அணையில் மீன் பிடிக்கும் உரிமத்தை தாண்டனூர் மீன்பிடி தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் பெற்றுள்ளனர்.
    • ஆனைமடுவு அணையில் பல்வேறு ரக மீன்கள் பிடிபட்டு வருகின்றன.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியின் குறுக்கே, புழுதிக்குட்டை கிராமத்தில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.

    இந்த அணையில் இயற்கையாக கெண்டை, கெளுத்தி ரக மீன்கள் காணப்படுகின்றன. மீன்வளத்துறை வாயிலாக, ரோகு, கட்லா, சில்வர், மிருகால், புல்கண்டா உள்ளிட்ட பல்வேறு ரக மீன்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    ஆனைமடுவு அணையில் மீன் பிடிக்கும் உரிமத்தை தாண்டனூர் மீன்பிடி தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் பெற்றுள்ளனர்.

    அணையில் இருந்து பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. 39 அடியில், 72 மில்லியன் கன அடி தண்ணீரே தேங்கியுள்ளது. இதனால், பரிசலில் செல்லும் மீனவர்களின் வலையில் ருசி மிகுந்த பல்வேறு ரக மீன்கள், அதிக அளவில் பிடிபட்டு வருகின்றன.

    மார்ச் மாத தொடக்கத்திலிருந்து நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கிலோ மீன்கள் பிடிப்படுகின்றன. ஒரு கிலோ மீன் ரூ.160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனைமடுவு அணையில் பல்வேறு ரக மீன்கள் பிடிபட்டு வருகின்றன. அணையில் பிடிக்கபடும் மீன்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து, வாழப்பாடி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த அசைவ பிரியர்களுக்கு தகவல் பரவியது. இதனால் மீன்கள் வாங்குவதற்கு அசைவ பிரியர்கள் குவிந்து வருகின்றனர். இங்கு தினம் தோறும் காலை நேரத்தில் மீன் கொள்முதல் செய்வதற்கு ஏராளமானோர் அணையில் குவிந்து வருகின்றனர்.

    ''அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருவதால் மீன்கள் பிடிப–டுவது அதிகரித்துள்ளது. எனவே, தட்டுப்பாடின்றி மீன்கள் கிடைக்குமென', மீன் பிடிக்கும் கூட்டுறவு சங்க மீனவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×