என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நம்பியாற்றில் இளம்பெண் கொன்று வீசப்பட்ட சம்பவம்: மனைவியின் நடத்தை சந்தேகத்தால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் -கைதான டிரைவர் வாக்குமூலம்
  X

  கைதான சுடலைக்கண்ணு.

  நம்பியாற்றில் இளம்பெண் கொன்று வீசப்பட்ட சம்பவம்: மனைவியின் நடத்தை சந்தேகத்தால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் -கைதான டிரைவர் வாக்குமூலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நம்பியாற்றில் ஈஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
  • ஈஸ்வரியின் நடத்தையில் மகாராஜனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

  களக்காடு:

  நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மைலாப்புதூர் மேலூரை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு என்ற மகாராஜன் (வயது40). கார் டிரைவர். இவரது மனைவி ஈஸ்வரி (34). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

  பெண் கொலை

  இந்நிலையில் நேற்று முன்தினம் நம்பியாற்றில் ஈஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் அவரது கணவரே கொலை செய்தது தெரியவந்தது.

  இதைத்தொடர்ந்து போலீசார் சுடலைக்கண்ணுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

  நடத்தை சந்தேகம்

  நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இதற்கு முன்பு மதுரையில் வாடகைக்குவீடு எடுத்து தங்கியிருந்தோம். அப்போது ஈஸ்வரியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

  பின்னர் மதுரையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நாங்கள் நாங்குநேரி அருகே உள்ள துலுக்கர்பட்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கினோம்.

  கடந்த 16-ந்தேதி நம்பியாற்று பகுதிக்கு நாங்கள் சென்றோம். அப்போது இது தொடர்பாக எங்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் ஈஸ்வரியை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை ஆற்றில் வீசிவிட்டு அங்கிருந்த தப்பி சென்றேன். போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

  இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

  Next Story
  ×