search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அங்கமங்கலத்தில் பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிடம் திறப்பு
    X

    புதிய கட்டிடத்தினை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது எடுத்த படம். அருகில் யூனியன் சேர்மன் ஜனகர், பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன் உள்பட பலர் உள்ளனர்.


    அங்கமங்கலத்தில் பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிடம் திறப்பு

    • அங்கமங்கலத்தில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
    • நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    குரும்பூர்:

    அங்கமங்கலத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன் வரவேற்றார். குரும்பூர் லூசியா ஆலய பங்கு தந்தை பபிஸ்டன், ஜமாத் நிர்வாகிகள் மிஸ்தார்அலி, நசீர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் பஞ்சாயத்து அலுவலக புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    முன்னதாக தமிழக அர சின் நமக்கு நாமே திட்டமும், இயேசு விடு விக்கிறார் புது வாழ்வு சங்கமும் இணைந்து குரும்பூர் புதுக்கிராமம் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை இயேசு விடுக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் திறந்து வைத்தார்.

    இதில் துணைத்தலைவர் முத்துசங்கர், ஆழ்வை யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராஜன், என்ஜினீயர் வெள்ளப் பாண்டி, தட்சணமாற நாடார் சங்க துணை தலைவர் முரு கேசப்பாண்டியன், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பாலமுருகன், குரும்பூர் வியாபாரி சங்க தலை வர்கள் கிஷோக் முரு கானந்தம், பரமசிவன், நாலுமாவடி பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து, பாதிரியர் ரொபிஸ்டன், ஜமாத் நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள், களப்பணியாளர்கள், தூய்மைப் பணியாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பஞ்சாயத்து செயலர் கிருஷ்ணம்மாள் நன்றி கூறினார்.

    Next Story
    ×