என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய கட்டிடத்தை குத்து விளக்கேற்றி பேரூராட்சி தலைவர் செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
கொடைரோட்டில் புதிய துணை சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு
- மா.சுப்பிரமணியன் கானொலி காட்சி மூலம் கொடைரோடு துணை சுகாதார நிலைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
- கவுன்சிலர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கொடைரோடு:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கானொலி காட்சி மூலம் கொடைரோடு துணை சுகாதார நிலைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி அம்மையநாயக்கனூர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் தொடங்கிவைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வினோத், துணைத் தலைவர் விமல்குமார் முன்னிலை வகித்தனர்.
இதில் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி, சுகாதார ஆய்வாளர் மாரிவேல் மற்றும் கவுன்சிலர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story