search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம் திறப்பு
    X

    சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடத்தை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் புதிய கட்டிடம் திறப்பு

    • ரூ. 20 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு ஆஸ்பத்திரி வளாக கட்டிடம் அமைய உள்ளது.
    • நோயாளிகள் மற்றும் உறவினர்கள் வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வார திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உட்புற நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் தங்குவதற்கான கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தலைமை டாக்டர் அருண் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சீர்காழி நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன், நகராட்சி ஆணையர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பொறியாளர் சித்ரா அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தி னராக பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்:-

    விரைவில் சீர்காழி ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு ஆஸ்பத்திரி வளாக கட்டிடம் அமைய உள்ளது.

    அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    விழாவில் டாக்டர் மருதவாணன், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஒப்பந்தக்காரர் அன்பழகன் நன்றி கூறினார்.

    Next Story
    ×