என் மலர்
உள்ளூர் செய்திகள்

உணவு கூடத்தை மேயர் சத்யா, ரிப்பன் வெட்டி திறந்துவைத்தே போது எடுத்த படம். அருகில் பிரகாஷ் எம்.எல்.ஏ. ஆணையாளர் சினேகா ஆகியோர் உள்ளனர்
ஓசூர் அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில், பல்நோக்கு கூடம் திறப்பு விழா
- 5.65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமையலறைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
- ஓசூர் எம்.எல்.ஏ.ஒய். பிரகாஷ், மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சி 36-வது வார்டிற்கு உட்பட்ட அந்திவாடி அரசு உயர் நிலைப்பள்ளியில் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 5.65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமையலறைக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஓசூர் மாநகராட்சி மற்றும் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி சுற்றுசுவர் மற்றும் பல்நோக்கு கூடம் கட்டுப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இதில், ஓசூர் எம்.எல்.ஏ.ஒய். பிரகாஷ், மேயர் எஸ்.ஏ. சத்யா ஆகியோர் கலந்து கொண்டு , சமைய லறைக் கூடம், பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் பல்நோக்கு கூடம் ஆகியவற்றை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். மாநகராட்சி ஆணையாளர் சினேகா முன்னிலை வகித்தார்.மேலும் இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






