search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமுருகன்பூண்டி நகராட்சியில்  அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
    X
    கோப்புபடம். 

    திருமுருகன்பூண்டி நகராட்சியில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

    • அனுமதியின்றி குழாய் இணைப்பு பெற்றிருப்பதும் தெரிய வந்தது.
    • பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் போலீசில் புகார் கொடுக்கலாம்.

    அவிநாசி:

    நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட திருமுருகன்பூண்டி பேரூராட்சியாக இருந்த போது 2,000க்கும் மேற்பட்ட அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.கடந்தாண்டு இத்தகைய இணைப்புகளை முறைப்படுத்தும் பணி நடந்தது. ஒரு இணைப்புக்கு 27 ஆயிரத்து 680 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதன் மூலம் ரூ.1.50 கோடி வரை வருவாய் ஈட்டப்பட்டது.

    இந்தநிலையில் புதிதாக பொறுப்பேற்ற நகர்மன்றம் புதிய இணைப்பு கொடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. இதுதொடர்பான கள ஆய்வில், நகராட்சிக்கு வரியே செலுத்தாமலும், எவ்வித அனுமதியும் பெறாமல் பலரும் குடிநீர் குழாய் இணைப்பு பெற்றிருப்பது தெரிய வந்தது. பலர், வரி செலுத்தியிருப்பினும் அனுமதியின்றி குழாய் இணைப்பு பெற்றிருப்பதும் தெரிய வந்தது.

    இத்தகைய முறையற்ற குடிநீர் குழாய் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்கவும், அவற்றை முறைப்படுத்தும் பணியை மேற்கொள்ள பிரத்யேக குழு அமைக்க வேண்டும் என நகராட்சி கமிஷனர், நகராட்சிகளின் மண்டல இயக்குனருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதையடுத்து பிரத்யேக குழு அமைக்கப்பட்டு, இத்தகைய முறையற்ற இணைப்புகளை துண்டிக்கும் பணி தொடங்கியது.

    இது குறித்துநகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:-

    பல ஆண்டுகளாக புதிய இணைப்பு கேட்டு, ஏராளமானோர் காத்துள்ளனர். குடியிருப்புகளுக்கு, 6 ஆயிரம் ரூபாய், வணிக பயன்பாட்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் மட்டும் கட்டணமாக வசூலித்து, புதிய இணைப்பு வழங்க திட்டமிட்டுள்ளோம்.அதற்கு முன்அனுமதியின்றி, முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றவர்களின் இணைப்புகளை முறைப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.

    இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் முறைப்படுத்தும் கட்டணத்தை நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி, மீண்டும் புதிய இணைப்புக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். புதிய குடிநீர் குழாய் இணைப்புக்கு சிலர் பெரும் தொகையை வசூலித்துள்ளதாகவும், புகார் வந்துள்ளது. அவர்கள் மீது பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் போலீசில் புகார் கொடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினர்.

    Next Story
    ×