என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பூதிநத்தம் கிராமத்தில்  சாலை வசதி அமைத்து தர வேண்டும்-  பொது மக்கள் கோரிக்கை
  X

  குண்டும் குழியுமாக உள்ள சாலையில் செல்ல சிரமப்படும் மாற்று திறனாளி.

  பூதிநத்தம் கிராமத்தில் சாலை வசதி அமைத்து தர வேண்டும்- பொது மக்கள் கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 4 கி.மீ தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
  • விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், கரும்பு, நெல் உள்ளிட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

  பாலக்கோடு,

  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பிக்கிலி ஊராட்சி பூதிநத்தம் முதல் செக்கிலிநத்தம் வரை உள்ள 4 கி.மீ தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

  இந்த சாலை வழியாக தினந்தோறும் பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலர் சென்று வருகின்றனர்.

  விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், கரும்பு, நெல் உள்ளிட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. சிகிச்சைக்காக அவசர ஊர்தி அழைக்கபட்டால் கூட குண்டும் குழியுமாக உள்ள சாலையில் சரியான நேரத்தில் வர முடிவதில்லை.

  கடந்த 5ஆண்டுகளாக கிராம பொதுமக்கள் பல்வேறு புகார் மனுக்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×