search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் பேரூராட்சி கூட்டத்தில்   நள்ளிரவுவரை நீடித்த கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
    X

    உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களை படத்தில் காணலாம்.

    வேலூர் பேரூராட்சி கூட்டத்தில் நள்ளிரவுவரை நீடித்த கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    • கூட்டத்தில் தி.மு.க, பா.ம.க மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் உட்பட 16 பேர் கலந்து கொண்டனர்.
    • 53 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் நகல் வழங்கப்பட்டன.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சி கூட்டம் நேற்று நடை பெற்றது. கூட்டத்தில் தி.மு.க, பா.ம.க மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் உட்பட 16 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் 53 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் நகல் வழங்கப்பட்டன. முறையாக அனைத்து வார்டுகளிலும் 53 தீர்மா னங்களில் உள்ள பணிகள் நடைபெறவில்லை என்று கூறி துணைத் தலைவர் ராஜா உட்பட 5 தி.மு.க உறுப்பினர்கள், பா.ம.க-வைச் சேர்ந்த ஒரு உறுப்பி னர் மற்றும் 3 சுயேட்சை உறுப்பினர்கள் உட்பட 9 உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

    எங்களது வார்டுகளில் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை. ஆனால் பணி நடைபெற்றதாக நீங்கள் இந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொடுத்துள்ளீர்கள். நாங்கள் இதனை வன்மை யாக கண்டிக்கின்றோம் என கூறினர்.

    பேரூராட்சி தலைவர் லட்சுமிமூர்த்தி, செயல் அலுவலர் (பொறுப்பு) சரவணன் இருவரும் உறுப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு முறையான பதில் அளிக்காமல் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

    இதனை கண்டித்து வேலூர் பேரூராட்சி 9 வார்டு உறுப்பினர்கள் மன்ற கூட்டரங்கில் தொடர்ந்து பகல் 12 மணி முதல் இரவு 9.45 மணி வரை சுமார்10மணிநேரத்திற்கு மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களிடம் சேலம் மண்டல பேரூ ராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ்ராம், பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இன்ஸ்பெக்டர் வீரம்மாள், செயல் அலுவ லர் (பொறுப்பு) சரவணன் ஆகியோர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பெரும்பான்மையான ஆதரவு இல்லாததால் கூட்டத்தில் தீர்மா னங்கள் எதுவும் நிறை வேற்றப்படவில்லை என கூறியதையடுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து பேரூராட்சி தலைவர் லட்சுமி மூர்த்தி கூறுகையில், நான் பெண் தலைவர் என்பதால் கவுன்சி லர்கள் யாரும் என்னை மதிப்பதில்லை. பேரூராட்சி பகுதிகளில் இதுவரை எந்த வேலையும் நடைபெற விடவில்லை.அதனால் வேலையே நடைபெறாமல் எப்படி ஊழல் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.

    கவுன்சிலர்கள் போராட்டம் காரணமாக வேலூர்பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×