என் மலர்
உள்ளூர் செய்திகள்

கெலமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை நடந்த போது எடுத்த படம்.
கெலமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
- ரூ.11 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையம்.
- ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, பணிகளை தொடங்கிவைத்தார்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கெலமங்கலம் ஒன்றியத்தில் தாவரக்கரை ஊராட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், கண்டகானப்பள்ளி ஊராட்சியில் ரூ.6 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்ட பூமிபூஜை செய்து ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, பணிகளை தொடங்கிவைத்தார்.
மேலும் கண்ட கானப்பள்ளி ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு தொடங்கிவைத்தார்.
மாவட்ட கவுன்சிலர் பூதட்டியப்பா, ஒன்றிய கவுன்சிலர்கள் நாகராஜ், பிரசாந்த், ஊராட்சி மன்றத் தலைவர் பார்வதம்மா, முன்னாள் கவுன்சிலர் வீரப்பா உட்பட பலர் கலந்துக்கொண்டார்கள்.
Next Story






