என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூக்காரெட்டிப்பட்டியில் மாபெரும் ரத்ததான முகாம்
    X

    மூக்காரெட்டிப்பட்டியில் மாபெரும் ரத்ததான முகாம்

    • பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.
    • ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூக்காரெட்டிப் பட்டியில் பொது சுகாதாரத்துறை மற்றும் ஸ்டான்லி கல்வியியல் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரிய ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    முகாமில் வட்டார மருத்துவ அலுவலர்கள் கவுரிசங்கர், விக்னேஷ், சுதா, ஸ்டான்லி கல்வியல் கல்லூரி தாளாளர் முருகேசன், செயலாளர் வட்டார சுகாதார மேற்பார்யாவையாளர் லட்சுமிபதி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஜெயக்குமார், நவநீதகிருஷ்ணன், அருண்குமார், வெங்கடேஷ் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×