என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டியில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
- பயிற்சி பாசறை கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் திராவிட இயக்க வரலாறு குறித்து பேசினார்.
- 800-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் , இளம் பெண்களும் கலந்து கொண்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி.
தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை சார்பில் மாநிலம் முழுவதும் பயிற்சிக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தி.மு.க.இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி பாசறை கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் திராவிட இயக்க வரலாறு குறித்து பேசினார். இந்த கூட்டத்தில் தமிழ் கா.அமுதரசன் மாநில சுயாட்சி குறித்து பேசினார். முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தடங்கம் மா. சுப்ரமணிஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 800-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் , இளம் பெண்களும் கலந்து கொண்டனர்.
Next Story